மின்கட்டணத்தை உயர்த்தும் யோசனையின் கீழ் எதிர்பார்க்காத அளவு மின்சார கட்டணம் அதிகரிக்கக்கூடும் என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அதனை மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாதெனவும் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாளை அல்லது நாளை மறுதினம் அளவில் மின்கட்டணம் அதிகரிக்கப்படும்.
25 முதல் 50 சதவீதத்தினால் கட்டணம் அதிகரிக்கப்படுமா? என்பது குறித்து தெரியவில்லை.
கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களுக்கு அமைய, மின்சார சபை முன்வைத்துள்ள யோசனைப்படி, முன்னர் காணப்பட்டதை விடவும் 500 சதவீதத்தால் அதிகரிக்கும்.
மின்சாரத்தை பயன்படுத்தாது எதிர்வரும் நாட்களில் மின்குழிழ் மற்றும் மின்விசிறி என்பவற்றை பார்த்து கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த இலங்கை மின்சார சேவையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜயலால், மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் தற்போது மின்சார சபை பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக குறிப்பிட்டார்.