வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையை தரமுயர்த்துவதற்கும் எதிர்பார்ப்பதாக கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடியால் காகித உற்பத்திக்கான மூலப் பொருட்களை இறக்குமதி செய்வது தடைப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்தோடு, தற்போது நிலவும் காகிதத் தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக, எதிர்காலத்தில் நாட்டில் பல புதிய தொழிற்சாலைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கைத்தொழில் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், வினாத்தாளை அச்சிட தேவையான கடதாசி பற்றாக்குறை ஏற்பட்டதையடுத்து, பாடசாலைகளில் இடம்பெறவிருந்த பல பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.