பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து வருவதால், நாடு முழுவதும் ஒழுங்கமைக்கப்படாத வெகுஜனப் போராட்டங்கள் வளர்ந்து வருவதாக அரச புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.
இந்தப் பின்னணியே ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவதற்கும் முக்கிய காரணமாக இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது நடைபெற்று வரும் போராட்டங்கள் அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு வெகுஜன போராட்டமாக உருவெடுத்து வருவதாக புலனாய்வுத்துறை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
இந்த நெருக்கடியானது மக்களின் அடிப்படை உணவுத் தேவைகளை வழங்க நிர்ப்பந்திப்பதன் மூலம் கடுமையான சமூக நெருக்கடியை உருவாக்குவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
வாழ்க்கைச் செலவு அதிகரிக்கும் அதே நேரத்தில் பணவீக்கமும் உயரும் போது மக்களின் உள்வாங்கும் சக்தி குறைந்து விரக்தி நிலையை உருவாக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.