(இராஜதுரை ஹஷான்)
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், எரிபொருள், மின்விநியோகம் மற்றும் மருந்து ஆகிய அத்தியாவசிய சேவை கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடி நிலைமைக்கு நிதியமைச்சர் பெசில் ராஜபக்க்ஷ பொறுப்புக்கூற வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகள் திட்டமிட்ட வகையில் பற்றாக்குறையாக்கப்பட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் நிலைமையை அவர் தோற்றுவித்துள்ளார்.
எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகியவற்றை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் காலையில் இருந்து இரவு வரை வரிசையில் காத்திருக்கிறார்கள். மாலை வீடு சென்றதும் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.
அரசாங்கத்தின் பெரும்பான்மை பலத்தை வெகுவிரைவில் சிதறடிப்போம். நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க அரசாங்கம் எவ்வித முன்னேற்றகரமான திட்டங்களையும் இதுவரையில் செயற்படுத்தவில்லை என்றார்.