எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு தீர்மானமொன்றை எடுத்துள்ளதாக அறியமுடிகிறது.
இவ்வருடத்திற்குள் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு ஏற்கனவே திட்டமிட்டிருந்தது.
இதனால் உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் ஓராண்டுக்கு நீடிக்கப்பட்டது. எனினும் மேற்படி முடிவை தற்போது மாற்றியுள்ள அரசு, முதலில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு தயாராகியுள்ளது.
இவ்வருடம் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள் ஐ.நா மனித உரமைகள் பேரவைக் கூட்டத்தொடருக்கு முன்னர், தேர்தலை நடத்தி மக்கள் ஆணையைப் பெறுவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.