இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை சேர்ந்த பெண் அறிவிப்பாளர் ஒருவர் உடனடியாக அமுலுக்குவரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
ரூபவாஹினியில் பல்வேறு சிங்கள நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய பிரபலமான அறிவிப்பாளர் பரமி நிலேப்தா ரணசிங்ஹவே இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவை விமர்சிக்கும் பதிவொன்றை தனது தனிப்பட்ட பேஸ்புக்கில் பகிர்ந்தமைக்காக தொலைக்காட்சி தொகுப்பாளினி இடைநிறுத்தம் செய்துள்ளதாக சுதந்திர ஊடக இயக்கம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
அவரை இடைநிறுத்தம் செய்ய இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் (SLRC) எடுத்த தீர்மானத்தையும் சுதந்திர ஊடக இயக்கம் கண்டித்துள்ளது.
இது கருத்து சுதந்திரம் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளரின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல் என அந்த இயக்கம் கூறியுள்ளது. இது இலங்கையில் ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் அப்பட்டமான முயற்சி என சுதந்திர ஊடக இயக்கம் மேலும் தெரிவித்துள்ளது.
தன்னைப் பணி நீக்கியமை தொடர்பாக பரமி நிலேப்தா ரணசிங்ஹ அவரது பேஸ்புக்கில், ‘ஒரு குடிமகன் என்ற ரீதியில் எனது பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் கேள்விக்குறியாகும்போது சமூகப் பொறுப்பாக எனது நலனையும் துயரத்தையும் பற்றி விசாரிப்பவர்களுக்காக நான் இந்தக் குறிப்பை இடுகிறேன். நான் பெரும்பான்மையான இலங்கையர்களின் வாழ்வு குறித்து உணர்திறன் கொண்டிருப்பதால் இன்று முதல் தொலைக்காட்சி வளாகம் எனக்கு தடை செய்யப்பட்ட இடமாக மாறியுள்ளது.
ரிவிதின அருணெல்ல, நுக சீன, சுசர தெஹன, நான மிஹிர, சக்ரவதயா, ஹார்ட் டாக், குருத்தலாவ போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் என்னைப் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்த்த தொலைக்காட்சிக்கும் பாறை வேர்களுக்கிடையில் எனக்கு அன்பான பாராட்டுக்களைத் தந்த பார்வையாளர்களுக்கும் எனது அன்பையும் புகழையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னப் பறவைகள் குண்டாக நடந்து கொண்டபோதும் தொலைக்காட்சி எனக்கு வெறும் அரசியல் குழப்பமாக இருக்கவில்லை. தாயின் குணங்களை அறிந்த குழந்தையாக ரூபவாஹினி அமைய நான் வாழ்த்துகின்றேன்.
என்றென்றும் நிம்மதியாக வாழலாம்.. இது ஒரு நிறுத்தம் இல்லை ஒரு திருப்பம்……..என்று அவரது இடுகையில் குறிப்பிட்டுள்ளார்.