லிட்ரோ மற்றும் லாஃப் நிறுவனங்கள் எரிவாயு விநியோகத்தை இன்று (16) முதல் இடைநிறுத்த தீர்மானித்துள்ளன.
போதுமான எரிவாயு இன்மை காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
எவ்வாறாயினும், அத்தியாவசிய சேவைகளுக்கு குறைந்த அளவிலான எரிவாயுவை மட்டுமே வழங்குவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.