Our Feeds


Thursday, March 24, 2022

Anonymous

சில அத்தியாவசியப் பொருட்களின் விலை மீண்டும் உயர வாய்ப்பு

 



பணம் செலுத்தி விடுவிக்க முடியாமல் சுமார் 1,500 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


இவ்வாறு தேங்கியுள்ள கொள்கலனில் கோதுமை மா, அரிசி, சீனி, கடலை மற்றும் மிளகாய் உள்ளிட்டவை அதிகளவில் காணப்படுவதாகவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

எனினும், இந்திய கடன் உதவியின் கீழ் குறித்த கொள்கலன்களை விடுவிப்பது தொடர்பில் 22ம் திகதி நிதி அமைச்சுடன் கலந்துரையாடப்பட்டதாக அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

குறித்த பொருட்களை விடுவிப்பதில் ஏற்படும் தாமத்திற்காக கப்பல்களுக்கு மேலதிக கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளதால் பொருட்களின் விலை கிலோவுக்கு 10 முதல் 35 ரூபாய் வரை அதிகரிக்கும் என தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. (R)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »