Our Feeds


Monday, March 28, 2022

SHAHNI RAMEES

ரணிலுக்கு பிரதமர் பதவியை வழங்குவதற்கு எவ்வித திட்டமும் இல்லை – பொதுஜன பெரமுன

 

ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்குவதற்கான எவ்வித திட்டமும் இல்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வலியுறுத்தியுள்ளது.

பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் தற்போது அந்த பதவியை வகிப்பதாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொது செயலாளர், சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவி மற்றும் தேசிய அரசாங்கம் தொடர்பில் வெளியாகும் தகவல்கள் தொடர்பாக இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெளிவுபடுத்திய போதே அவர் இதனை கூறினார்.

இதன்போது ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன, ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்குமளவிற்கு தமது கட்சியில் எவருக்கும் மூளையில் கோளாறு கிடையாது என நினைப்பதாக கூறியுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »