குறிப்பாக அந்நாட்டின் வடகிழக்குப் பகுதியில் தொழில்துறை நகரமான சாங்சுன்னில் (Changchun ) கொரோனோத் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்ததையடுத்து அப்பகுதியில் கடந்த 11 ஆம் திகதியிலிருந்து பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அத்தியாவசியமான காரணங்கள் இல்லாமல்மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேற கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் வசிக்கும் சுமார் 9 மில்லியன் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த நகரில் உள்ள அனைத்து அத்தியாவசியமற்ற வணிக மற்றும் போக்குவரத்து இணைப்புகளையும் அதிகாரிகள் இடைநிறுத்தம் செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.