மீண்டும் பரவும் கொவிட் தொற்று காரணமாக சீனாவின் பல பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன.
சீனாவின் முக்கிய தொழிற்துறை நகரங்கள் பலவும் முடக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சீனாவின் வட கிழக்கு மாகாணமான Jilin நகரின் 9 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட Shenyang நகரும் முடக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் நேற்று மாத்திரம் 4,770 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
Omicron தொற்றே அதிகளவில் பரவி வருவதாக அந்நாட்டு சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
சீனாவில் சுமார் ஒரு வருடத்தின் பின்னர் கடந்த சனிக்கிழமை இரண்டு கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.