நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை அடுத்து, மண்ணெண்ணை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் இந்த தருணத்தில், அவ்வாறு வரிசையில் காத்திருந்த வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கண்டி – எல்லேபொல எரிபொருள் நிரப்பு நிலையத்தலேயே இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
மண்ணெண்ணை கொள்வனவு செய்வதற்காக காத்திருந்த குறித்த நபர், திடீரென கீழே வீழ்ந்துள்ளார்.
இதையடுத்து, அங்கிருந்த சிலர் அவரை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளார்.
கண்டி – வத்தேகம – உடத்தலவின்ன பகுதியைச் சேர்ந்த 71 வயதான மொஹமட் இலியாஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.