நிலுவையாகவுள்ள 6 பில்லியன் ரூபாவிற்கும் அதிக தொகை நீர் கட்டணம் அறவிடப்பட வேண்டியுள்ளதாக நீர் வழங்கல் அமைச்சு தெரிவித்துள்ளது.
நீர் கட்டணத்தை செலுத்தாத அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோருக்கு, கட்டணத்தை செலுத்துமாறு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
06 மாதங்களுக்கும் மேலாக நீர் கட்டணத்தை செலுத்தாத பயனாளர்களுக்கு நீர் விநியோக இணைப்பை துண்டிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
எவ்வாறாயினும், நீர் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை எனவும் நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்தார்.