(இராஜதுரை ஹஷான்)
ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய 69 இலட்சம் மக்களும் தற்போது அரசாங்கத்தை கடுமையாக சபிக்கிறார்கள். நிதியமைச்சர் பெசில் ராஜபக்க்ஷ 6 மாத காலத்துக்காகவது அமைச்சு பதவியிலிருந்து விலக வேண்டும். மகா சங்கத்தினரால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவும் முடியும், ஆட்சியை வீழ்த்தவும் முடியும் என அபயராம விஹாரையின் விஹாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.
அபயராம விகாரையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிபபிட்டார்.
பெசில் ராஜபக்க்ஷ அமைச்சு பதவி ஏற்றதன் பின்னரே பொருளாதாரம் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளதாக நாட்டு மக்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.
எனவே பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வரை நிதியமைச்சர் பெசில் ராஜபக்க்ஷ ஆறு மாத காலத்துக்காவது அமைச்சு பதவியிலிருந்து விலக வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.