கல்கிஸை பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற பேரில் இயங்கிய இரண்டு விபசார விடுதிகளை சோதனைக்கு உட்படுத்தியதில் 5 பெண்கள் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிஸை பொலிஸ் பிரிவில் காலி வீதியில் இயங்கி வந்த குறித்த விபசார விடுதிகளை சோதணையிட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேக நபர்களாக 5 பெண்களைக் கைது செய்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட ஐந்து பெண்களும் 20 முதல் 40 வயதுக்கு இடைப்பட்ட மின்னேரியா, தெனியாய, மஹியங்கனை, பாதுக்க மற்றும் மன்னம்பிட்டிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.
மேலதிக விசாரணைகளை கல்கிஸை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.