Our Feeds


Sunday, March 27, 2022

SHAHNI RAMEES

55 வருடங்களுக்கு பின்னர் சர்வதேச விமான சேவைகளை ஆரம்பித்த இரத்மலானை விமான நிலையம்

 



இரத்மலானை சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக 55 வருடங்களுக்கு பின்னர் இன்று (27) முதல் சர்வதேச விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, மாலைத்தீவிலிருந்து வருகைத் தந்த விமானமொன்று இன்று காலை 08:47க்கு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

இரத்மலானை விமான நிலையத்திற்கு வருகைத் தரும் விமான நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் 60 டொலர் பயண வரி, 30 டொலர் மாத்திரமே அறவிடப்படவுள்ளது.

இதேவேளை, கடந்த 2 வருடங்கள் இயங்காதிருந்த இந்தியாவிற்கான சர்வதேச விமான சேவை இன்று முதல் ஆரம்பிக்கப்படுகின்றது.

இலங்கை உள்ளிட்ட 40 நாடுகளுக்கு சொந்தமான 60 விமான சேவை நிறுவனங்களுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இந்திய சிவில் விமான சேவை அதிகார சபை தெரிவிக்கின்றது.

கொவிட் வைரஸ் பரவலுக்கு மத்தியில், 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியாவிற்கான சர்வதேச விமான சேவைகள் கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.














Subscribe to this Blog via Email :
Previous
Next Post »