குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு விசேட கொடுப்பனவை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, புத்தாண்டு காலத்தை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறும் 3.1 மில்லியன் குடும்பங்களுக்கு இரண்டு மாதங்களுக்கு 5000 ரூபா விசேட கொடுப்பனவை வழங்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.