நாட்டுக்கு சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள் என்பவற்றுடன் கப்பல்கள் வந்து கொண்டிருப்பதாகவும் நாடளாவிய ரீதியில் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும் இவற்றைப் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலைமை மாற்றமடையவில்லை. இந்நிலையில் எதிர்வரும் 4 நாட்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என்று லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 4 நாட்களுக்குள் தற்போது காணப்படும் எரிவாயு தட்டுப்பாடு முற்றாக மாற்றமடையும் என்று லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது நாளாந்தம் நாடளாவிய ரீதியில் ஒரு இலட்சத்து 20,000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுவதாகவும் மேல் மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் குருணாகல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் இவற்றுக்கான வரிசை குறைவடையும் என்று எதிர்பார்ப்பதாகவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.