கடந்த 12 நாட்களாக கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த டீசல் மற்றும் விமான எரிபொருள் தாங்கி வருகை தந்த கப்பலுக்கு 42 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர் ஒல்கா தெரிவித்துள்ளார்.
இதன்படி, 20,000 மெட்ரிக் டன் டீசல் மற்றும் 20,000 மெட்ரிக் டன் விமான எரிபொருளை இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
எனினும், கப்பலுக்கான தாமதக் கட்டணம் இதுவரை கணக்கிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்திய கடனுதவியுடன் 35,000 மெட்ரிக் தொன் பெட்ரோலை தாங்கிய மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.