(எம்.எப்.எம்.பஸீர்)
நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் சிறையில் அடைக்கப்பட்ட, தற்போதைய ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி தலைவரும் பொது பல சேனா அமைப்பின் பொது செயலருமான கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அளித்த பொதுமன்னிப்பை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள இரு அடிப்படை உரிமை மீறல் மனுக்களையும் பரிசீலனைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் இன்று (28) தீர்மானித்தது.
மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்களையுமே இவ்வாறு எதிர்வரும் மே 17 ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் தீர்மனித்தது.
உயர் நீதிமன்ற நீதியரசர்களான புவனேக அளுவிஹாரே தலைமையிலான மஹிந்த சமயவர்தன, அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தது.