பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கை பங்களாதேசிடமிருந்து மேலும் 250 மில்லியன் டொலரை கடனாக கோரியுள்ளது.
இது குறித்து பங்களாதேஷ் ஆராய்ந்து வருகின்றது ஆனால் இன்னமும் முடிவெடுக்கவில்லை என அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் A.K அப்துல் மொமீன் தெரிவித்துள்ளார்.