நீர்கொழும்பு பிரதேசத்தில் மகனின் தாக்குதலில் தந்தை உயிரிழந்துள்ளார். நீர்கொழும்பு, கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெற்கு கட்டான பிரதேசத்தில் இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தந்தை, மகனுக்கிடையில் ஏற்பட்ட தகராறில் 22 வயதுடைய குறித்த சந்தேக நபர் அவரது தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார். உயிரிழந்த நபர் 44 வயதான கெமுனு மாவத்தை, தெற்கு கட்டான பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொச்சிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.