அடுத்த வருடம் முதல் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அரச அச்சக ஊழியர்கள் சங்கத்தின் ஆலோசகர் எம்.டி.ஆர். அத்துல தெரிவிக்கின்றார்.
கடதாசி தட்டுப்பாடு காரணமாக அரச அச்சகத் திணைக்களத்தின் நடவடிக்கைகள் முடங்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக அவர் கூறுகின்றார்.
அடுத்த வருடத்திற்கான பாடசாலை புத்தகங்களை அச்சிடுவதற்கு தேவையான கடதாசி இல்லாமையினால், மாணவர்களில் கல்வி நடவடிக்கைகள் முழுமையாக பாதிக்கப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த வருடம் பாடசாலை புத்தகங்களை அச்சிடுவதற்கு கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொன் கடதாசியின் விலை 165,000 ரூபாவாக காணப்பட்டதோடு, தற்போது அந்த தொகை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.