மின் உற்பத்திக்கான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்று (19) ‘A’ முதல் ‘L’ வரையிலான 12 வலயங்களில் மூன்று மணித்தியாலங்கள் 45 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை இன்று அறிவித்துள்ளது.
‘P’ முதல் ‘W’ வரையான வலயங்களில் இன்று மூன்று மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
‘A’ முதல் ‘L’ வரையிலான 12 வலயங்களில் காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை பகலில் 2 மணி 30 நிமிடங்களும் மாலை 6.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை ஒரு மணிநேரமும் 15 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
P முதல் W வரையிலான 8 வலயங்களில் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையில் பகலில் ஒரு மணிநேரமும் 30 நிமிடங்களும், மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை ஒரு மணிநேரமும் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (