ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு எதிராக ஒரே நாளில் – ஒரே நேரத்தில் 150 போராட்டங்களை நாடு தழுவிய ரீதியில் நடத்துவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
இதன்படி ஏப்ரல் 07 ஆம் திகதி தேர்தல் தொகுதிகள்வாரியாக குறித்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், கட்சி செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இப்போராட்டங்களில் பங்கேற்று, தமது எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளனர்.
அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டமும் பேரணியும் கண்டியில் இடம்பெறவுள்ளது.
அதன்பின்னர் ஜுன் 30 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியின் பிக்குகள் மாநாடு கொழும்பில் நடைபெறவுள்ளது. டிசம்பர் மாதம் கட்சியின் தேசிய மாநாடு இடம்பெறவுள்ளது.