அனல் மின் நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்காததால் நாளைய தினம் (31) மின்வெட்டு காலத்தை 13 மணித்தியாலமாக அதிகரிக்க இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, மின் துண்டிப்பு தொடர்பில், இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.