அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மே தின கூட்டத்தை தனியாக நடத்துவதற்கு அரச பங்காளிக் கட்சிகள் தீர்மானித்துள்ளன.
இதன்படி ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, விமலின் கட்சி, உதய கம்மன்பிலவின் கட்சி உட்பட 11 கட்சிகள் இணைந்து, அரசுக்கு எதிராக கொழும்பில் மே தினக் கூட்டத்தை நடத்தவுள்ளன.
கம்யூனிஸ்ட் கட்சி தலைமையகத்தில் நேற்றிரவு நடைபெற்ற விசேட கூட்டமொன்றின்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டள்ளது.