பாகிஸ்தானில் இம்ரான்கானின் அரசு பெரும்பான்மையை இழந்ததுள்ளது. தனது கூட்டணி கட்சியான எம்.கி.எம் கட்சி இம்ரான் கான் அரசுக்கு அளித்த வந்த ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளது.
நம்பிக்கையில்லா தீா்மானம் வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்னரே இம்ரான் கான் அரசுக்கு பின்னடைவு ஏற்ப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீா்மானம் மீது நாடாளுமன்ற கீழவையில் அடுத்த மாதம் 3ஆம் திகதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு உள்துறை அமைச்சா் ஷேக் ரஷீத் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: பிரதமா் இம்ரான் கானுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீதான விவாதம் மார்ச் 31 ஆரம்பமாகும் என தெரிவித்தார்.
அதனைத் தொடா்ந்து, அந்தத் தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பு அடுத்த மாதம் 3ஆம் திகதி நடைபெறும் என குறிப்பிட்டார்.