ஆளும் பொது ஜன பெரமுன அரசாங்கத்தின் முறையற்ற பொருளாதார நிர்வாகம், மக்களால் தாங்கிக்கொள்ளமுடியாத அளவிற்கு அதிகரித்துள்ள வாழ்க்கைச்செலவு, சர்வதேசத்தின் மத்தியில் நாடு சந்தித்துள்ள பாரிய பின்னடைவு உள்ளடங்கலாக தற்போது ஏற்பட்டுள்ள பல்வேறு நெருக்கடிகளையும் முன்னிறுத்தி, அவற்றுக்குக் காரணமான அரசாங்கத்திற்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் ‘முழு நாடும் அழிவில்: பொறுத்தது போதும், ஒன்றாய் அணிதிரளுங்கள்’ என்ற தொனிப்பொருளில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தவுள்ளது.
குறித்த பேரணி நண்பகல் ஒரு மணிக்கு பொது நூலகத்திற்கு முன்னாலிருந்து ஒரு பேரணியும், மற்றொரு பேரணி மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்திற்கு முன்னாலிருந்தும் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.