Our Feeds


Friday, November 12, 2021

SHAHNI RAMEES

YouTube இல் இனி இதை செய்ய முடியாது- வருகிறது புதிய அப்டேட்

 

கூகுள் நிறுவனத்தின் ஒன்லைன் வீடியோ பகிர்வு மற்றும் சமூக வலைத்தளமான யூடியூப் தளத்தில் புதிய அப்டேட் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி இனி வரும் நாட்களில் டிஸ்லைக் செய்தவர்களின் எண்ணிக்கையை பொதுவெளியில் அனைவராலும் பார்க்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், அந்த டிஸ்லைக் பொத்தான் தற்போது இருக்கின்ற இடத்தில் இருக்கும் என்றும், பயனர்கள் அதை பயன்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதன் மூலம் ஒரு வீடியோவை எத்தனை பேர் டிஸ்லைக் செய்துள்ளனர் என்பதை அனைவரும் அறிந்து கொள்வது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. டிஸ்லைக் விபரம் வீடியோவை அப்லோட் செய்யும் பயனருக்கு மட்டும் தெரியும் என யூடியூப் தெரிவித்துள்ளது. இது அவரது கண்டென்ட் மக்களை எந்தளவுக்கு கவர்ந்துள்ளது என்பதை பற்றி புரிந்து கொள்ள உதவும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.


இதன் மூலம் வீடியோக்களை கிரியேட் செய்து பகிரும் பயனர்கள் மீது குறிவைத்து நடத்தப்படும் ‘டிஸ்லைக்’ தாக்குதலுக்கு தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாக சொல்கிறது யூடியூப். இதனை சோதனை ரீதியாக பரிசோதித்து தற்போது அறிமுகம் செய்துள்ளோம். இனி ஒவ்வொருவராக இந்த புதிய அப்டேட் அனுபவத்தை பார்க்க முடியும் என யூடியூப் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »