Our Feeds


Monday, November 29, 2021

SHAHNI RAMEES

Whatsapp எதிர்வரும் தினங்களில் மாறும் விதம்

 

"

கைப்படங்களை எடிட் செய்து கொள்ளும் வசதிகள், ஸ்டிக்கர்களை உருவாக்கும் வசதி என முக்கிய 5 அம்சங்களை வாட்ஸ்அப்

, விரைவில் அறிமுகப்படுத்தபட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உலக அளவிலும் பல கோடி மக்கள் நாளாந்தம் பயன்படுத்தும் ஒரு செயலியாக வாட்ஸ்அப் இருந்து வருகிறது.

வாட்ஸ் அப் நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கிய பின்னர் வாட்ஸ்அப்பில் பல்வேறு அப்டேட்களை அந்த நிறுவனம் வழங்கி வருகிறது.

வாட்ஸ்அப்பில் பாதுகாப்பு வசதியை அதிகரிக்கும் நோக்கிலும் பயனாளிகளை கவரும் விதத்திலும் புதிய அப்டேட்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் வாட்ஸ் அப் செயலியில் விரைவில் வரவிருக்கும் சில முக்கிய அப்டேட்டுகள் குறித்து தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, வாட்ஸ் அப் செயலியில் மெசேஜ்களை டெலிட் செய்வதற்கான டைம் லிமிட் விரைவில் அதிகரிக்கப்பட உள்ளது. அதாவது குரூப்பில் அனுப்படும் மெசேஜ்களை டெலிட் செய்வதற்கான கால அவகாசம் தற்போது 1 மணிநேரம் 8 நிமிடமாக உள்ள நிலையில், விரைவில் இது ஒரு வாரமாக அதிகரிக்கபட உள்ளதாக கூறப்படுகின்றது.

இதுதவிர ஆடியோ மெசேஜ்களை பாஸ்ட் பார்வர்டு செய்து கேட்கும் வசதி சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி 2 மடங்கு வரை ஸ்பீடை அதிகரித்து ஆடியோ மெசேஜ்களை பாஸ்ட் பார்வர்டு செய்யலாம். விரைவில் இதன் ஸ்பீடை 2 மடங்குக்கு மேல் அதிகரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

லாஸ்ட் சீன், புரஃபைல் புகைப்படங்களுக்கான பிரைவசி செட்டிங்கிலும் விரைவில் மாற்றம் வர உள்ளதாக சொல்லப்படுகின்றது.

தற்போது லாஸ்ட் சீன் மற்றும் முகப்பு புகைப்படத்தை அனைவரும் பார்க்கலாம் (Everyone), யாரும் பார்க்ககூடாது (Nobody) மற்றும் தன்னுடைய காண்டாக்ட் லிஸ்டில் இருப்பவர்கள் (My Contacts) மட்டும் பார்க்கலாம் என மூன்று பிரைவசி செட்டிங் இருக்கும் நிலையில், விரைவில் இதில் காண்டாக்ட் லிஸ்டில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் காட்டக்கூடாது  (My Contacts…Except) என்கிற ஆப்சனையும் இணைக்க உள்ளார்களாம்.

அதேபோல் புகைப்படத்தை எடிட் செய்து கொள்ளும் வசதியும், ஸ்டிக்கர்களை உருவாக்கும் வசதியும் விரைவில் அறிமுகப்படுத்தபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »