இந்திய வட்ஸ்அப் பயனர்களுக்கு ‘ஃப்ளாஷ் கால்ஸ்’ மற்றும் ‘மெசேஜ் லெவல் ரிப்போர்ட்டிங்’ என்ற இரண்டு புதிய பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ஃப்ளாஷ் கோல்ஸ்
அடிக்கடி கைபேசிகளை மாற்றுபவர்கள், வட்ஸ்அப்பை தங்கள் மாற்றும் கைபேசிகளில் பதிவிறக்கம் செய்யும்போது மெஸேஜ் மூலம் சாரிபார்க்கப்படும். ஆனால், இனிமேல் தானியங்கி அழைப்பு மூலமே சரிபார்க்கப்படும்.
மெஸேஜை விட தானியங்கி அழைப்பு மூலம் சரிபார்க்கப்படுவது கூடுதல் பாதுகாப்பு அளிக்கும் என வட்ஸ்அப் நிறுவனம் கருதுகிறது.
மெசேஜ் லெவல் ரிப்போர்ட்டிங்
இந்த புதிய அம்சம் மூலம், தேவையில்லாத அல்லது விருப்பம் இல்லாதவர்களை பிளாக் அல்லது ரிப்போர்டிங் செய்வதற்கு பதிலாக அந்த மெஸேஜை அழுத்தி பிடித்தால், பயனரின் ப்ரொஃபைல் படம், கடைசி பார்வை (லாஸ்ட் சீன்) உள்ளிட்டவை தெரியாது.
இதனிடையே, வாட்ஸ்ஆப் நிறுவனமானது முகநூல் போன்று வட்ஸ்அப்பிலும் மெஸேஜ் ரியாக்சன் முறையை என்ட்ரோய்ட் பயனர்களுக்காக வடிவமைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.