Our Feeds


Wednesday, November 10, 2021

Anonymous

VIDEO: ஒரு இளைஞருக்கு அர ஏக்கர் குடுத்திரிக்கி - தமிழில் சரமாரியாக பதிலளித்த அமைச்சர் மஹிந்தானந்த

 


இன்றைய (10) நாடாளுமன்ற அமர்வின் சபை ஒத்திவைப்பு நேரத்துக்கான கேள்வி நேரத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரின் கேள்விக்கு பதிலளித்த விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தமிழ் மொழியில் பதலளித்திருந்தாா்.


இதன்போது வேலுகுமார் எம்.பிக்கும் அமைச்சர் மஹிந்தானந்தவுக்கும் சபையில் வாக்குவாதமும் இடம்பெற்றது.

கண்டி மாவட்ட பெருந்திட்ட பகுதி காணி வழங்கல் நடவடிக்கையில் கடந்த ஆட்சிக் காலத்தில் முறைகேடு நடந்திருப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சபையில் தெரிவித்தார்.

நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் சபை ஒத்திவைப்பு நேரத்தின் கேள்வி நேரத்தில் போது, பெருந்தோட்ட துறையின் தாய் நிறுவனமான மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை (JEDB) பெருந்தோட்ட துறையின் கீழ் இருக்கும் இந்த நிறுவனம் பெருந்தோட்ட அமைச்சின் கீழ் கொண்டுவராப்ப்ட்டமை விவசாய அமைச்சினால் கடந்த செப்டம்பா் மாதம் 6ஆம் திகதி எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்துக்கமைய இந்த சபைக்குச் சொந்தமான நாவலப்பிட்டி – கலபொட தோட்டம், வட்டவலை – மவுன்ஜீன் தோட்டம், ஹந்தான – தெல்தொட்டை தோட்டம், தெல்தொட்டை கிரேட்வெலி தோட்டம் ஆகிய தோட்ட பகுதிகளிலுள்ள நிலப்பகுதிகள் பாற்பண்ணை அபிவிருத்திக்காக பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை ஆகிய விடயங்கள் தொடர்பில் வேலுகுமார் எம்.பி. எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தாா்.

கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இவ்வாறு குறிப்பிட்டாா்,

அப்பட்டமாகப் பொய் கூறக் கூடாது. கலபொட மற்றும் கலஹா ஆகிய பிரதேசங்களில் இரு காணிகள் வழங்கப்பட்டுள்ளன. இதுவே பிரதானம்.

அதனை அமைச்சரவையில் சமர்ப்பித்து இலங்கை முதலீட்டுச் சபையின் வெளிநாட்டு நிதி உதவியுடனான வேலைத்திட்டத்துக்கே இந்த வேலைத்திட்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுக்கள் காணியில் ஒரு தேயிலை செடிகூட இல்லை. 

தேயிலை பயிரப்பட்டுள்ள ஒரு ஏக்கர் காணி கூட இந்த வேலைத்திட்டத்தில் இணைத்துக்கொள்ளப்படவில்லை. இந்த காணிகள் முழுமையான வெற்றுக் காணிகள். நீர்வளம் உள்ள இடங்களில் எந்தவொரு பிரதேசமும் இந்த திட்டத்தின் கீழ் இணைத்துக்கொள்ளப்படவில்லை என்று தெரிவித்தாா்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »