(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு சேவையில் சிறுவர்களை அழைத்து செல்லும் வேளையில் உயிர் பாதுகாப்பு கவசங்களை பயன்படுத்தவில்லை, இது சட்டவிரோதமான செயற்பாடு மட்டுமல்ல நாட்டின் சட்டத்துக்கு அமைய இது கொலையே.
ஆகவே இந்த மரணங்களை நாம் கொலையாகவே கருதுகிறோம், இதனுடன் தொடர்புபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிப்போம் என ஆளுந்தரப்பு பிரதம கொரடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சபையில் தெரிவித்தார்.
இந்த பாலத்துக்கு அடிக்கல் நட்டியது நல்லாட்சியாகும். மதிப்பீடு செய்யாது, கேள்விமனுக் கோரல் விடாது அடிக்கல் நாட்டினர். நாம் ஆட்சிக்கு வந்த பின்னர் மதிப்பீடு செய்து, கேள்வி மனுக் கோரலுக்கு விடப்பட்டு பாலத்தில் ஒரு பகுதியை புனரமைக்கவும் மக்களின் பாவனைக்கு விட வெகு விரைவில் திருத்த நடவடிக்கை எடுத்தோம். ஜூலை மாதம் இது குறித்து இம்ரான் மஹரூப் எம்.பி கேள்வியும் எழுப்பியிருந்தார்.
இதேவேளை, இந்தப் படகு சேவைக்கு கிண்ணியா நகர சபையே அனுமதி வழங்கியுள்ளது. ஆகவே எம்மீது குற்றம் சுமத்த வேண்டாம் என்றார்.