வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன், நாடாளுமன்ற உறுப்பினா் இராசமாணிக்கம் சாணக்கியனின் பெயரை மாற்றி மொஹமட் சாணக்கியன் என்று கூறியதால் சபையில் சற்று முன் வாக்குவாதம் இடம்பெற்றது.
சாணக்கியன் எம்.பியின் பெயரை திலீபன் எம்.பி. மொஹமட் சாணக்கியன் கூற, நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அதற்கு கடும் கண்டங்களை வெளியிட்டாா்.
“ இந்த சபையில் அவர் இல்லை. சாணக்கியன் எம்.பியின் முழு பெயர் இராசமாணிக்கம் இராஜபுத்திர சாணக்கியன். ஆனால் அவரை மொஹமட் என்று பெயரை மாற்றி கூறுகிறாா் என்றால் இவர் ஒரு கீழ்த்தனமான நாடாளுமன்ற உறுப்பினா். எந்த தகுதியும் இல்லாத நாடாளுமன்ற உறுப்பினர். இதனை ஹன்சாட்டிலிருந்து நீக்க வேண்டும். சாணக்கியனுடைய பெயரை மாற்றுவது நாடாளுமன்ற சட்டத்திட்டங்களுக்கமைய தவறானதாகும். இதனை வன்மையாக கண்டிக்கிறேன்” என்றாா்.
இதனையடுத்து சபைக்கு தலைமை தாங்கிய எம்.பி., அவ்வாறு தவறு ஏற்பட்டிருந்தால் அதனை ஹன்சாட்டிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டாா்.