ஒரே நாடு ஒரே சட்டம் உருவாக்க ஜனாதிபதி செயலணிக்கு ஞானசார தேரரை நியமித்ததை இன்று விமர்சனம் செய்கிறார்கள். எனக்குத் தெரியும் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னாலிருந்து ஒரே நாடு ஒரே சட்டம் வர வேண்டும் என பேசியவர் ஞானசார தேரர் தான் என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதனால் தான் நான் ஞானசார தேரருக்கு தொடர்பு கொண்டு “நீங்கள் தானே இது பற்றி பேசி வருகிறீர்கள். அதனால் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற இந்த கோட்பாட்டை நீங்கள் எனக்கு உருவாக்கித் தாருங்கள். நீங்கள் உருவாக்கித் தருவதை நீதி அமைச்சருக்கு வழங்கி அதில் குறை நிறைகள் இருக்கிறதா என்பதை ஆராய்ந்து பாராளுமன்றில் சமர்ப்பிக்கிறேன்” எனக் கூறினேன். அதுதான் எனக்குத் தேவை.
இப்போது அதனையும் விமர்சனம் செய்கிறார்கள். என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ இன்று நடைபெற்ற நிகழ்வில் கருத்து வெளியிட்டார்.