ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பு கூறவேண்டியவர்களின் பிரஜாவுரிமையை கூட, தேவை ஏற்படும் பட்சத்தில் ரத்து செய்வதற்கு அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
களனி கேபள் பாலத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று (24) கலந்துக்கொண்டு உரை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தமது அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளதாகவும், பாராளுமன்றத்தில் சட்டமூலமொன்றை கொண்டு வந்து அதனை நிறைவேற்ற தயார் எனவும் அவர் கூறுகின்றார்.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அப்போதைய ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை பொறுப்பு கூற வேண்டும் என கடந்த அரசாங்கத்தினாலேயே நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.