கடந்த சில நாட்களாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து எரிவாயு கசிவு காரணமாக வெடிப்புகள் பல ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எரிவாயுக் கசிவு ஏற்பட்டால், முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் இதுபோன்ற கடுமையான விபத்துகளைத் தடுக்கலாம்.
அதன்படி, எரிவாயு கசிவைக் கண்டறிய உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சாதனம் குறித்து அத தெரணவுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிவாயு கசிவைக் கண்டறியும் கருவிகள் பொதுவாக உலகின் ஏனைய பகுதிகளில் பயன்படுத்தப்பட்டாலும், இலங்கையில் இன்னும் பரவலாகக் கிடைக்கவில்லை.
´லைஃப்´ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சாதனம் நாட்டிலேயே முதல் எரிவாயு கசிவைக் கண்டறியும் கருவியாகும்.
எபிக் குழுமத்தின் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்பு பிரிவின் திட்டத்திற்கு பொறுப்பான தலைமை பொறியியலாளர் சானக தென்னகோன் தெரிவிக்கையில்,
வாயு கசிவினை கண்டுபிடிக்கும் சாதனம் என்ற போதும் இது தீப்பிடிக்கும் எந்தவொரு விடயத்திற்கும் செயற்படும். இதனை இணையத்துடன் தொடர்பு படுத்த முடியும். இதன் காரணமாக விபத்து ஒன்று ஏற்பட்டால் கைப்பேசிக்கு எச்சரிக்கை செய்தி வரும். இது, வாயு, வெப்பநிலை மற்றும் புகை போன்றவற்றை உணரக்கூடியது."