கனடாவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் கலந்து கொண்ட கூட்டத்தில் பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, கூட்டம் இடைநடுவில் நிறுத்தப்பட்டது.
கூட்டம் நடந்து கொண்டிருந்த போது, மண்டபத்திற்கு வெளியில் ஒரு பகுதியினர் போராடட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் விடுதலைப் புலிகளின் கொடியை கையில் ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த நிலையில், மண்டபத்தில் பங்குகொண்ட எவரும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரையும் கேள்விகேட்க அனுமதிக்கப்படவில்லை.
இறுதியில், கூட்டம் இடைநிறுத்தப்பட்டு பொலிசாரின் பாதுகாப்புடன் சுமந்திரன், சாணக்கியன் மண்டபத்திலிருந்து வெளியேறி சென்றனர்.
இதே வேலை கனடாவுக்கு இனிமேல் வரக்கூடாதென்ற வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி சுமந்திரனை புலம்பெயர் தமிழர் ஒருவர் எச்சரித்த காணொளியை சமூக ஊடகங்களில் காணமுடிந்தது. (தமிழன்)