பாராளுமன்ற சபை அமர்வுகளின் போது இன்றைய தினம் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டிஆராய்ச்சி மீது தாக்குதல் நடத்த, எதிர்கட்சியினர் முயற்சித்ததை அடுத்தே, இவ்வாறு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, திஸ்ஸ குட்டிஆராய்ச்சி மீது தாக்குதல் நடத்த முயற்சித்த சந்தர்ப்பத்தில், எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அதனை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
பெண்கள் குறித்து தகாத வார்த்தை பிரயோகம் பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறு, திஸ்ஸ குட்டிஆராய்ச்சிக்கு, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று எச்சரிக்கை விடுத்தார்.
பாராளுமன்ற சபை நடவடிக்கைகளின் போதே, சபாநாயகர் இதனைக் குறிப்பிட்டார்.
இவ்வாறான சூழ்நிலையிலேயே, சபைக்குள் அமைதியின்மை ஏற்பட்டது.