தனது இரண்டு கால்களையும் இழந்த நிலையில், கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சையில் மூன்று பாடங்களிலும் A சித்தி பெற்று பல்கலைக்கழக பிரவேசத்தை பெற்ற மாணவியே மதுஷிகா தில்ருக்ஷி்.
பதுளை − ஹாலிஎல பிரதேச செயலக பிரிவிற்கு சொந்தமான ரில்பொல பகுதியில் வசிக்கும் அவர், அதே ஊரிலுள்ள தர்மராஜ வித்தியாலயத்தில் கல்வி பயின்றுள்ளார்.
பிறப்பிலேயே இரண்டு கால்களும் அற்ற நிலையில் பிறந்த மதுஷிகா தில்ருக்ஷி், அதனை தனது கல்விக்கு இடையூறாக நினைக்கவில்லை.