கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் இன்று (23) காலை படகு விபத்தில் 11 பேர் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
காணமல் போனவர்களை தேடும் பணிகளை கடற்படையினர் முன்னெடுத்து வருவதாக நிஹால் தல்துவ “தமிழன்” செய்தி பிரிவுக்கு தெரிவித்தாா்.
குறித்த படகு ஆற்றை கடக்க முயற்சித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் படகில் 20 மாணவர்கள் விரையில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாணவர்கள் 6 பேர் வரை உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.