இக்பால் அலி
வாரியபொல பிரதேச சபையின் ஆளும் கட்சியான பொதுஜன பெரமுனவின் வரவு செலவுத் திட்டம் வாக்கெடுப்பில் தோல்வியடைந்துள்ளது.
வாரியபொல பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நேற்று மூன்று மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. வாரியபொல பிரதேச சபையின் தலைவர் டி.எம்.டி.பி.திஸாநாயக்க வரவு செலவுத் திட்டத்தை சபையில் சமர்ப்பித்தார்.
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 18 வாக்குகளும் எதிராக 21 வாக்குகளும் அளிக்கப்பட்டன. .
பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று உறுப்பினர்களும் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தமை விசேட அம்சமாகும்.