Our Feeds


Tuesday, November 23, 2021

ShortNews Admin

SHORT_BREAKING: கிண்ணியா விபத்து - இம்ரான் மஹ்ரூப் பாராளுமன்றில் கடும் குற்றச்சாட்டு - ஹக்கீமும் விமர்சனம்



கிண்ணியா , குறிஞ்சாக்கேணியில் இடம்பெற்ற படகு விபத்து அரசின் அசட்டை காரணமாகவே நடந்துள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் சபையில் சுட்டிக்காட்டினார். முறையான வகையில் அந்த படகுச் சேவை நடைபெறவில்லையென்றும் அவர் குறிப்பிட்டார்.


இதேவேளை கிண்ணியா விபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இந்த படகு பாதை குறித்து பல தடவைகள் சுட்டிக்காட்டியபோதும் அது தொடர்பில் நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையென இம்ரான் மஹ்ரூப் எம் பியும் நாடாளுமன்றத்தில் தெரிவித்து தனது கண்டனத்தை வெளியிட்டார்.

இந்த விடயம் குறித்து கவனித்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் சபையில் கேட்டுக்கொண்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »