சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் உயிரிழந்த பொலன்னறுவையை சேர்ந்த 19 வயது இளம் பெண்ணின் உடல் ஊர் மக்கள் திரண்டு கண்ணீர் மழ்க அடக்கம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த கவலையை உண்டாக்கியுள்ளது.
பொலன்னறுவை வெலிக்கந்த சந்துன்பிட்டிய கிராமத்திலுள்ள வீடொன்றில் கடந்த 12ஆம் திகதி சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் 19 வயதான யுவதி ஒருவர் கொழும்பு பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை உயிரிழந்துள்ளதாக வெலிக்கந்த பொலிஸார் தெரிவித்தனர்.
சமகாலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கேஸ் வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
இது தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், விஞ்ஞான ரீதியிலான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.