வடமாகாண மரநடுகை மாதத்தினை முன்னிட்டு (மறைந்த)மரணித்த நண்பரின் நினைவாக யாழ் / கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலயம் மற்றும் உரும்பிராய் மேற்கு கனிமொழி முன்பள்ளி மாணவர்களுக்கு பயனுள்ள சுமார் 100 மரக்கன்றுகள் உரும்பிராய் உதவும் நண்பர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் வழங்கி வைக்கப்பட்டது.
இன் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை காலை 08.10 மணிக்கு ஆரம்பமானது நிகழ்வில் தமிழ்தேசிய பசுமை இயக்க தலைவரும் முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சருமாகிய திரு.பொன்னுத்துரை. ஐங்கரநேசன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி வைத்ததோடு மரக்கன்றுகளையும் நாட்டி வைத்தார்.