Our Feeds


Saturday, November 6, 2021

ShortNews Admin

PHOTOS: தமது திறமைகளை வளர்க்க இளைஞர்களுக்கு நேரமின்மை பெரும் பிரச்சினையாக உள்ளது : கல்முனையில் பூப்பந்தாட்ட உள்ளக அரங்கு திறப்புவிழாவில் எஸ்.எம். சபீஸ் தெரிவிப்பு !


(எம்.என்.எம். அப்ராஸ் )


எமது உடல் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமானது. இன்றைய காலத்தில் நாம் எந்தளவு உடல் ஆரோக்கியத்திற்காக முக்கியத்துவம் வழங்குகின்றோம் என்பதை எல்லோரும்  சிந்திக்க வேண்டியது மிகவும் அவசிமானதொன்றாகும் என அக்கரைப்பற்று மாநகர உறுப்பினரும், அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவருமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார்


கல்முனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வின்னர்ஸ் பூப்பந்தாட்ட உள்ளக அரங்கம் (Badminton Indoor Court) வின்னர்ஸ் ( Winners ) பூப்பந்தாட்ட  அரங்கின் ஸ்தாபகர் யூ. எல். எம்.ஹிலாலின் தலைமையில் இன்று (05) திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று மாநகர உறுப்பினரும், அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளனத் தலைவருமான எஸ்.எம். சபீஸ் கலந்து கொண்டு பூப்பந்தாட்ட உள்ளக அரங்கினை திறந்து வைத்த பின்னர் இங்கு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் அங்கு உரையாற்றுகையில்


தமது திறமைகளை வளர்க்க இளைஞர்களுக்கு நேரமின்மை பெரும் பிரச்சினையாகவுள்ளது .அன்றாட வேலைப்பளுக்கள் மற்றும் நேரமின்மை காரணமாக நாம் உடற்பயிற்சி செய்வது குறைவாகத்தான் உள்ளது. இவ்வாறான பூப்பந்தாட்ட  விளையாட்டு  அரங்குகள் அமைப்பது சுகாதாரத்தை மேம்படுத்த அவசியமான தொன்றாகும். இன்றைய காலகட்டத்தில் பலர் பல்வேறு வகையான  தொழில் துறைகளில் முதலீடுகளை மேற்க்கொண்டு வரும் நிலையில் பூப்பந்தாட்ட விளையாட்டு துறையினை மேம்படுத்தும் நோக்கில் மட்டுமல்லாம், உடற்பயிற்சியினையும் உடல் ஆரோக்கியத்திற்கு வழியமைக்கும் வகையில் ஹிலால் ஆசிரியரின்  இவ் பூப்பந்தாட்ட உள்ளக அரங்கம் ஆரம்பித்து இருப்பதையிட்டு  இந்த நல்ல செயற்திட்டத்தை வரவேற்பதுடன் பூப்பந்தாட்ட  விளையாட்டு மூலம்  உடல் செம்மையை சீராக வைத்திருக்க முடியும் என்ற நம்பிக்கை காணப்படுகிறது.  


மேலும் இளைஞர்கள் இந்த பூப்பந்தாட்ட விளையாட்டின் மூலம் தம்மிடையே காணப்படும் திறனை விருத்தி செய்யும் வாய்ப்புள்ளது. இதன் மூலம் திறைமைகளை வெளிக் கொண்டு வர முடிவதுடன்  எதிர்காலத்தில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியாக இடம்பெறும் பூப்பந்தாட்ட போட்டியில்  பிரகாசிக்கக்கூடிய நிலை உள்ளது  என்றார். இந்நிகழ்வில் கல்முனை பொலிஸ் நிலைய  பிரதம பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.எம் வாஹீட் உட்பட பிராந்திய விளையாட்டு வீரர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.








Subscribe to this Blog via Email :
Previous
Next Post »