(மயூரன்)
யாழ்ப்பாணம் கோட்டைக்கு அண்மித்தாகவுள்ள கிறிஸ்தவ தேவாலயம் மீது இன்று (29) அதிகாலை தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை நடத்தியதுடன் கொட்டடி பகுதியைச் சேர்ந்த ஒருவரை சந்தேகத்தில் கைது செய்துள்ளனர்.
தாக்குதலின் பிண்ணனி தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.