கொழும்பில் ஏற்படும் வாகன நெரிசல் குறித்து விமானப்படை ஆராய்ந்துள்ளது.
விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் மற்றும் ட்ரோன் கமராக்களை பயன்படுத்தி, கொழும்பின் வாகன நெரிசல் குறித்து ஆராயப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவிக்கின்றது.
இதன்படி, தாமரை தடாகம் சந்தி, ஆயுர்வேத சுற்றுவட்டம், தியத்த உயன பகுதி, பஞ்சிகஹவத்தை பகுதி, களனி புதிய பாலம் மற்றும் பாராளுமன்றத்தை அண்மித்த பகுதிகள் கண்காணிக்கப்பட்டுள்ளதாக விமானப்படை குறிப்பிடுகின்றது.