திருகோணமலை − கிண்ணியா − குறிஞ்சாக்கேணி பகுதிக்கான படகு சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடற்படையினால் இந்த சேவை வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவிக்கின்றது. குறித்த பகுதிக்கான பாலம் நிர்மானிக்கப்படும் வரை, கடற்படையினால் இந்த சேவை முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
முழுமையான பாதுகாப்புக்கு மத்தியில் ஒரே தடவையில் 25 பேர் வரை இந்த படகில் பயணிக்க முடியும் என கடற்படை கூறுகின்றது.